மும்பை தாராவி குடியிருப்பில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா உறுதி!

மும்பை தாராவி குடியிருப்பில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மும்பையிலும் இதன் தாக்கம் சற்று உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிக பெரிய குடிசை குடியிருப்பை கொண்டது மும்பை தான். இந்த தாராவி எனும் குடியிருப்பில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6.5 லட்சம் மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு ஏற்கனவே பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அங்குள்ள மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்கு பிறகு தற்பொழுது கொரோனாவின் தாக்கம் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே உள்ளது என இன்று உறுதி செய்யாட்டுள்ளது.