கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் டிஸ்சார்ஜ்!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று வீடு திரும்புகிறார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், அதற்க்கு மறுப்பு தெரிவித்தார்.
இதன்காரணமாக, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றிலிருந்து கடந்த 15-ம் தேதி குணமடைந்ததாக மருத்துவ நிர்வாகம் அறிவித்த நிலையில், சகஜ நிலை திரும்புவதற்காக அமைச்சர் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் இன்று டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025