“கறுப்பர் கூட்டம்” சேனலை முடக்கக்கோரி யூடியுப்-க்கு கடிதம்!

“கறுப்பர் கூட்டம்” யூடியுப் சேனலை முடக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யூடியுப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது.
மேலும், இந்த சேனலின் பின்னணி மற்றும் நிதி உதவி செய்வோர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், மற்றொருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சரணடைந்த சுரேந்திரனை வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் பாடல் பாடல் பற்றி சர்ச்சைகுரிய வகையில் கருத்துக்களை பதிவிட்ட
“கறுப்பர் கூட்டம்” சேனலை முடக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யூடியுப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது.
மேலும், இந்த சேனலின் பின்னணி மற்றும் நிதி உதவி செய்வோர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்தி வருவதாகவும் தகவல் வெளியானது.