மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த நிலச்சரிவில் மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுவரை 48 உடல்களை மீட்புப்படையினர் மீட்ட நிலையில் இன்று புதையுண்ட பகுதியில் இருந்து இன்று இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது அங்கு மழை பெய்து வரும் நிலையிலும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025