350 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய ‘மாஸ்டர்’ ஆல்பம்.!

மாஸ்டர் ஆல்பம் 350 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான். இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் நிறைந்த ஆல்பம் 350 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
#350MForMasterAlbum ????????
➡️ https://t.co/FgUpiMYnLv#Thalapathy @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ pic.twitter.com/P9tc0iuOtA
— Anirudh Ravichander (@anirudhofficial) August 22, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025