முதலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தஸ்லீம், என்ற இளைஞர் டெல்லியில் பால் விவசாயியாக இருக்கும் ஓம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் .அவருக்கு மாத சம்பளம் 15,000 வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட காரணத்தால் வருவாய் இல்லாத காரணத்தால் சம்பளத்தை குறைப்பதாக ஓம்பிரகாஷ் கூறியுள்ளார் .இதனால் ஓம் பிரகாஷிற்கும் தஸ்லீம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது மேலும் ஓம் பிரகாஷ் வீட்டிற்குள் தூங்கும் போது தஸ்லீம் கட்டையை எடுத்து தலையில் பலமாக தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கொலை செய்துவிட்டு ஒரு சாக்கு பையில் கட்டி கிணற்றில் தூக்கி வீசியுள்ளார் . இந்நிலையில் மேலும் கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டார் ஓம் பிரகாசை காணவில்லை என்று காவல் துறைக்கு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நாளாகி கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கூறிய நிலையில் அவரது சடலத்தை கண்டு பிடித்தனர்.
மேலும் இதனை அடுத்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த தஸ்லீமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025