விமானத்தில் உள்ள சகல வசதி அடங்கியுள்ள காரை விற்பனை செய்யும் ஹாலிவுட் நடிகர்!

விமானத்தில் உள்ள சகல வசதி அடங்கியுள்ள தனது காரை விற்பனை செய்யும் ஹாலிவுட் நடிகர்.
ஹாலிவுட் திரையுலகில் பல்வேறு ஆக்சன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன். இதனை தொடர்ந்து கடைசியாக இவர் ராம்போ த லாஸ்ட் பிளட் படத்தில் நடித்து அந்த படம் கடந்த வருடம் தான் வெளியாகியது. இந்நிலையில் நடிகர் சில்வஸ்டர் ஸ்டோலன் தனியார் விமானத்தில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான கருப்பு நிற சொகுசு கார் ஒன்றை வைத்துள்ளார்.
4 லட்சம் அமெரிக்க டாலருக்கு இவர் வாங்கியுள்ள இந்த காரில் மொபைல் இண்டர்நெட், சாய்ந்த இருக்கைகள், அல்ட்ரா ஹெச்.டி டிவி 43 இன்ச் டிடிவி உள்ளிட்ட பல வசதிகள் அடங்கியுள்ள தனது இந்த காரை 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்க முடிவு செய்துள்ளார். சில பேரிடம் மட்டுமே உள்ள இந்த காரை ஆட்டோமேட்டிவ் டிசைன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது, தற்போது இந்த நிறுவனமே இந்த காரை விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025