சீனாவில் இடிந்து விழுந்த இரண்டு அடுக்குமாடி ரெஸ்டாரென்ட்.! 29 பேர் உயிரிழப்பு .!

Default Image

சீனாவில் இரண்டு அடுக்குமாடி ரெஸ்டாரென்ட் இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் இருந்து சுமார் 600கிமீ தொலைவில் உள்ள ஜியாங்பென் நகரத்தில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் ஒரு பழமையான இரண்டு அடுக்குமாடி கொண்ட ரெஸ்டாரென்ட் செயல்பட்டு வந்தது. நேற்று அந்த ரெஸ்டாரென்ட்டில் 80 வயதான முதயவரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது காலை 9.30 மணியளவில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது.

உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் கொடுக்க, உடனடியாக விரைந்து வந்த படை வீரர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த இடிபாடுகளில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ரெஸ்டாரென்ட் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்