“தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்திற்காக சிந்தித்தவர் அரியலூர் அனிதா!”- மு.க.ஸ்டாலின் புகழாரம்

தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக செலுத்திய சமூகநீதிப் போராளி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்றாலே இந்தியா முழுவதும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாணவி அனிதா உயிரிழந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவரின் நினைவஞ்சலியாக, “தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்திற்காக சிந்தித்தவர் அரியலூர் அனிதா” என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, #NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி!
நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!#அNEETதி
— M.K.Stalin (@mkstalin) September 1, 2020
அந்த பதிவில், தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக செலுத்திய சமூகநீதிப் போராளி என தெரிவித்தார். மேலும், நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க மாணவர்கள், பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருவது கூறிப்பிடத்தக்கது.