71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை – ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்!

71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் இணைப்பு அனுமதி பெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழும அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட் கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 71 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து இருந்தால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025