விவசாயிகளுக்கு உதவ 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன: ஜே.பி.நட்டா.!

விவசாயிகளுக்கு உதவ 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன என்று பாஜக தலைவர் ஜே.பி.நடா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த மூன்று மசோதாக்கள் மிகவும் தொலைநோக்குடையவை. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை மிக வேகமாக அதிகரிக்கப்போகின்றது.
விவசாயத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதில் இந்த மசோதாக்கள் மிக முக்கியமானவை, மேலும், கிசான் தயாரிப்பு மசோதா விவசாயிகளுக்கு உதவப் போகிறது என பாஜக தேசியத் தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாக்களை எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதன் மூலம், விவசாயிகளின் அனைத்து வளர்ச்சிக்கும் இடையூறாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை முகம் உள்ளது, எல்லாவற்றிலும் அரசியல் செய்வது எப்போதும் அவர்களின் வேலை. காங்கிரசுக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025