“அதிமுக, பாஜக இடையே எந்த மனக்கசப்பும் கிடையாது!” – எல்.முருகன்

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் கிடையாது எனவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சசிகலா வெளியே வந்தவுடன் அவரின் நிலைப்பாட்டை தொடர்ந்தே நடவடிக்கைகள் தெரியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இந்தியா என கூறினார். மேலும், வேளாண் சட்டத்திருத்த மசோதா மூலம் மதுரை மல்லிப்பூவை டெல்லி முதல் லண்டன் வரை கொண்டுசெல்லலாம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025