அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பன்னீர்செல்வம் , செம்மலை வருகை

அதிமுக செயற்குழு நடைபெற இருக்கும் நிலையில், தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , செம்மலை வந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.
இதன் பின் அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28-ஆம் தேதி திங்கள்கிழமை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலயில் வரும் 28-ஆம் தேதி அதிமுக செயற்குழு நடைபெற இருக்கும் நிலையில், தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , செம்மலை வந்துள்ளனர். செயற்குழு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தலைமை அலுவலகத்திற்கு இருவரும் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025