இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை…. அதன் பின் நடந்த துயர சம்பவம்!

Default Image

இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை, மருத்துவமனை கூட்டிச்சென்ற பின் உயிரிழந்ததால் சோகத்தில் குடும்பத்தினர்.

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரூகர் எனும் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தம்பதிகள் தங்களது இரண்டு வயது குழந்தை சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நேரம் அந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை.

எனவே அங்கிருந்த கமெண்டர் தான் அந்த குழந்தையை பரிசோதித்துள்ளார். பின் அவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த குழந்தையின் பெற்றோர்கள் அந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தாயின் மடியில் கிடந்த குழந்தை திடீரென அசைந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அஸ்ஸாம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.

ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிருடன் தான் இருந்துள்ளது, தற்பொழுது சிறிது நேரத்திற்கு முன்பதாக தான் இருந்துள்ளதாக கூறியதுடன் சரியான நேரத்திற்கு அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். குழந்தை தற்பொழுது தான் இறந்துள்ளது ஆனால், கமெண்டர் சொன்னதை கேட்டு வைத்திருந்ததால் தான் இந்த நிலை என்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக அவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், காவலர்களும் தவறாக மருத்துவம் பார்த்த கமெண்டரை கைது செய்து சிறையிலடைத்துள்ளதுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war