பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம்! பாகிஸ்தான் அரசு அதிரடி!

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் எங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்காக பல நாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானிலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயங்கரமான தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளின் துஷ்பிரயோகங்களுக்கு முன்மாதிரியான தண்டனை அளிக்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாலியல் சட்ட திருத்த வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மசோதா தொடர்பான விவாதத்தில், அமைச்சர்கள் சிலர் , பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கில் இடவேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.
ஆனால் அந்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு இம்ரான்கான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025