சைபர் கிரைம் வழக்குகளை விசாரிக்க 5 பிரிவுகளை அமைக்கவுள்ள புனே காவல்துறை!

புனே காவல்துறை, சைபர் கிரைம் வழக்குகளை விசாரிக்க 5 பிரிவுகளை அமைக்கவுள்ளது. திறமை மற்றும் பின்னணியின் அடிப்படையில் இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகள் தேர்வு.
இன்று தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவது போல, குற்றங்காலும் நாலுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் பல முயற்சிகள் மேற்கொண்டாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், புனே காவல்துறை, சைபர் கிரைம் வழக்குகளை விசாரிக்க 5 பிரிவுகளை அமைக்கவுள்ளது.
இதுகுறித்து, புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா கூறுகையில், இத்தகைய குற்றங்களை விசாரிப்பதில் அவர்களின் திறமை மற்றும் பின்னணியின் அடிப்படையில் இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், திருட்டு, ஆன்லைன் டேட்டிங் மோசடிகள் மற்றும் ஆன்லைன் வணிக மோசடிகள் போன்ற பல்வேறு விஷயங்களில் இந்த பிரிவு கவனம் செல்லும் என தெரிவித்துள்ளார்.