கொரோனா தடுப்பூசி போட்டால் நீங்கள் ஒரு முதலையாக மாறலாம்- பிரேசில் அதிபர்

நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயம் அற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
பிரேசில் அதிபர் போல்சனாரோ சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் ஹைட்ராக்ஸிகுளோயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்தார். இதற்கிடையில் ஸ்பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதை போட்டுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அது தனது தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் முதலையாக மாறலாம். தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயம் அற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று அவர் மேற்கோள் காட்டி கூறியுள்ளார். இதனால் பிரேசில் நாட்டு மக்களிடையே தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதா வேண்டாமா? பக்க விழாய்வுகள் வந்து விட்டால் என்ன செய்வது? போன்ற பெரிய குழப்பத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025