#Breaking: நடிகர் ரஜினி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார். படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்திற்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025