#Breaking: நடிகர் ரஜினி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

Tamil actor Rajinikanth has been admitted to Apollo Hospital in Hyderabad due to changes in blood pressure.

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார். படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள்நெகட்டிவ்என வந்துள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்திற்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.