திமுகவுடனான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க முடியும் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்!

புதுச்சேரியில் திமுகவுடனான கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்க முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக அரசுடனான புதுவை காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் கோஷ்டி பூசல்கள் அதிகம் இருப்பதாலும், காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் பாஜகவுக்கு தாவும் நிலை இருப்பதாலும் கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக என்ஆர் காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைக்கவும் திட்டமிடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஆளுநர் கிரண் பேடியை சந்திப்பதற்காக அனுமதி கோரி புதுவையில் 2 வாரமாக அமைச்சர் கந்தசாமி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
அமைச்சர் கந்தசாமயை நேரில் சந்தித்து பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது புதுவை திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கே எஸ் அழகிரி, புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்கப்படும் என நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், தமிழகம் புதுச்சேரியில் திமுக உடனான கூட்டணி தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025