தேனி மாவட்ட பெண் ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதி!

தேனி மாவட்டத்தின் ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருட காலங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பல இடங்களில் இதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் தடுப்பூசிகள் அனுமதியுடன் போடப்பட்டு கொண்டிருந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அதிலும், முக்கியமாக அரசியல்வாதிகள், நடிகர்கள், அமைச்சர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனா தனது வீரியத்தை காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்தின் ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025