பேரறிவாளன் விடுதலை ! தமிழக ஆளுநர் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுப்பார் – மத்திய அரசு பதில்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில்,பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 2 அல்லது 3 நாட்களில் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025