தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்.!

Mohammad Siraj, who returned from a tour of Australia, visited his father's grave and paid his last respects.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாய் நாடு திரும்பிய முகமது சிராஜ், தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முகமது சிராஜ் ஐபிஎல் போட்டியை முடித்ததும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் அந்நாட்டு விதிமுறைப்படி தனிமையில் இருந்தார். அப்போது, சிராஜின் தந்தை நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் காலமானார். ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை.

கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என தெரிவித்திருந்தார். அதன்படி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாய் நாடு திரும்பிய முகமது சிராஜ், தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தற்போது சிராஜ் தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.