தெலுங்கானாவில் லாரி -ஆட்டோ மோதி விபத்து.. 7 பேர் உயிரிழந்த சோகம்!

தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தில் உள்ள டேவரகொண்டா மண்டல் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலையை முடித்துவிட்டு, ஆட்டோவில் 20-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஆட்டோ மீது லாரி மோதியது.
இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்த நிலையில், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி டிரைவரை கைது செய்து, விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025