விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி – சிவகார்த்திகேயன் ட்வீட்..!

நடிகர் சிவகார்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கலைமாமணி விருது பெற்றதால் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தத கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டது . பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, சிவகார்த்திகேயன், சௌகார் ஜானகி, ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமீதா,இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று வழங்கினார். நடிகர்கள் சிவகார்த்திகேயன்,யோகி பாபு உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார். இந்த விருதை வாங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இந்த ட்வீட்டில் அவரது அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், “இந்த விருதளித்து ஊக்கப்ப டுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று தெரிவித்துள்ளார்.
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி???? தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்???? pic.twitter.com/EtBPVyycNK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 20, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025