#ELECTIONBREAKING: தொகுதி பங்கீடு நிறைவு…மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.!

திமுக கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து கூட்டணி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இன்று திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தமாக 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதில், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி மற்றும் ஆதித்தமிழர் பேரவை கட்சி என ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் – 6 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் – 6 தொகுதிகள்
மதிமுக – 6 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சி – 25 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 6 தொகுதிகள்
தமிழக வாழ்வுரிமை கட்சி- 1 தொகுதிகள்
மக்கள் விடுதலை கட்சி – 1 தொகுதிகள்
ஆதித்தமிழர் பேரவை கட்சி- 1 தொகுதிகள்
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025