கர்ணன் படத்திற்கு தடை கோரி வழக்கு…. இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்..!!

கர்ணன் படத்திற்கு தடை கோரி வழக்கு புல்லட் பிரபு என்பவர் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் வழக்கு செய்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதி இந்த பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் பண்டாரத்தி புராணம் ஆண்டி பண்டாரம் என்ற சமூகத்தை காயப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், படம் வெளியாவதற்கு முன்பு அந்த பாடலை படத்திலிருந்து நீக்கவேண்டும் என்றும் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ், பாடலை வெளியிட்ட திங் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025