#Breaking: மகாராஷ்டிரா முதல்வரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் மற்றும் அம்மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தியாவிலே கொரோனா பாதிப்பு தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள காரணத்தினால் நாக்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் மற்றும் அம்மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.