#Breaking: புதுச்சேரியிலும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக வரும் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ருத்ரா கவுட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக வரும் 22-ம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025