கொரோனா அச்சம்: ஒலிம்பிக் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

தற்பொழுது உலகளவில் கொரோனா மீண்டும் பரவிவரும் காரணத்தினால் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி, ரசிகர்களின்றி நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி, கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் இந்த ஒலிம்பிக் போட்டி தொடங்கி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
உலகளவில் பல விளையாட்டு வீரர்கள் இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி, ரசிகர்களின்றி நடைபெறும் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்தது. தற்பொழுது உலகளவில் கொரோனா மீண்டும் பரவிவரும் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.