ஸ்டாலினுக்கு பதவி கொடுங்கள் என்று கருணாநிதியிடம் நான் தான் சொன்னேன் – ராமதாஸ்

நான் தான் ஸ்டாலினின் அப்பாவிடம், நீங்கள் இரவு பகலாய் அதிகமாய் செய்கிறீர்கள், எனவே, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று சொன்னேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், முதல்வர் எடப்பாடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஒரு மேடையில், நான் தான் ஸ்டாலினின் அப்பாவிடம், நீங்கள் இரவு பகலாய் அதிகமாய் செய்கிறீர்கள், எனவே, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று சொன்னேன். நான் சொல்லி 15 நாட்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள் என்றும், அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அமுத சுரப்பி என்றும், பாமக-வின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025