நொய்டா: “வீடியோகேம் விளையாடதே..!” என்று பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை.

Default Image

நொய்டாவில் மொபைல்போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை.

மொபைல் போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்துமாறு  பெற்றோர்கூறியதைத்  தொடர்ந்து, 15 வயது சிறுவன்  புதியதாக கட்டும் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

நொய்டாவில், செக்டர் 110 என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர் தங்களது 7 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனை வீடியோ கேம் விளையாடுவதை நிறுத்தச் சொல்லிக் கண்டித்ததால், அச்சிறுவன் கடந்த வியாழன்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் திரும்ப வரவில்லை, இதனால் பதற்றமடைந்த அவனது பெற்றோர் அங்கும் இங்கும் தேடினர். எனினும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் அச்சிறுவனின் உடலை நேற்று முன்தினம் புதியதாக கட்டும் ஒரு கட்டிடத்தின் அருகில் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

மேலும் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது,” என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து, கூடுதல் போலீஸ் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) எலமரன் ஜி கூறுகையில், “காணாமல்போன சிறுவனின் உடல் அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த சிறுவன் கட்டிடத்திலிருந்து குதித்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai