ம.நீ.ம தான் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்… நாங்கள் போகவில்லை – எஸ்டிபிஐ

அமமுக கூட்டணி அதிக வெற்றி பெறும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவரான தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவரான தெஹ்லான் பாகவி, கருத்துக்கணிப்புகளை தாண்டி இந்த தேர்தலில் அமமுக கூட்டணி அதிக வெற்றி பெறும் என்றும் சிறுபான்மையினர் ஒரே கட்சியை பின்தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை இருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை, அவர்கள்தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தனர். பின்னர் வரும் தேர்தலில் அமமுக தான் உகந்த கூட்டணி என்று முடிவெடுத்து சந்திக்கிறோம். இந்த தேர்தலில் அமமுகவுக்கு பெரிய ஆதரவு இருப்பதை களத்தில் பார்க்கிறோம் என கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு ஒவைசி வராவேண்டாம் என கூறினேன். தேர்தலில் ஒவைசியின் கட்சி போட்டியிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாமியர்கள் ஒரே கட்சியின் பின்னல் நிற்கக்கூடாது. இஸ்லாமியர்கள் அனைத்து தளங்களிலும் பிரிந்து நிற்பது நல்லது தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக வெற்றிபெற கூடாது என்று எஸ்டிபிஐ உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025