பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்; பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன்- ஸ்டாலின் ..!

கஜா புயலின்போது மக்கள் எதிர்ப்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் என ஸ்டாலின் தெரிவித்தார்.
நகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். வேதாரண்யம் – வேதரத்தினம் , நாகை – ஆளூர் ஷாநவாஸ் , கீழ்வேளூர் -மாலிக் ஆகியோருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்; பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன். கஜா புயலின்போது மக்கள் எதிர்ப்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் என தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை. பிரதமர் மோடி இனையம் துறைமுகம் கொண்டு வருவோம் என்கிறார். இனையம் துறைமுகம் திட்டத்தை கொண்டு வரவில்லை என முதலமைச்சர் சொல்லுகிறார். துறைமுகம் விவகாரத்தில் மீனவர்களை பிரதமர், முதலமைச்சர் ஏமாற்றுகின்றனர் என குற்றச்சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025