கர்ணன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட தனுஷ்..!!

தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், தற்போது நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#Karnan #april9th pic.twitter.com/CTIyZ7IjXt
— Dhanush (@dhanushkraja) April 5, 2021
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.