நேற்றைய போட்டியில் நடராஜன் இடம்பெறாதது ஏன் தெரியுமா..??

நேற்று நடந்த ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் அணியில் இடம் பெறாத காரணத்தை ஹைதராபாத் அணியின் நிர்வாகி டாம் மூடி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் நேற்று நடந்த இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இடம்பெறவில்லை. கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த நடராஜன் அணியில் இடம்பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். அவர் அணியில் இடம்பெறாத காரணத்தை தற்போது ஹைதராபாத் அணியின் நிர்வாகி டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ” ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நடராஜன் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக அவர் விளையாடி வருவதால் அவர் பணிசுமையை குறைப்பதற்கான நோக்கத்துடன் அவருக்கு பதில் கலீல் அகமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025