#Breaking: தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள்? அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை!

As the spread of corona in Tamil Nadu is increasing day by day, Chief Minister Palaniachchi is consulting with the authorities.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒருநாள் பாதிப்பு 9,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என்று தகவல்கள் வெளியானது.