தீபிகா கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தின் மதிப்பு இவ்வளவா!

நடிகை தீபிகா படுகோனே தன் கையில் 18 லட்சம் மதிப்புடைய சோபர்ட் எனும் பிரபலமான கம்பெனியின் கடிகாரத்தை அணிந்து விளம்பர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் தங்களது ரசிகர்கள் மற்றும் தங்களை பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல சில நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுப்பதன் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுக்கு அந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பொருட்களை அணிந்து விளம்பரம் செய்ய வேண்டும்.
அதேபோல நடிகை தீபிகா படுகோனேவும் பல முக்கியமான மிக அதிக மதிப்புடைய பொருட்களுக்கு விளம்பரம் கொடுத்து அதற்கான சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு வருகிறார். அது போல தற்பொழுது சோபர்ட் என்று சொல்லக்கூடிய ஒரு பிரபலமான கடிகார கம்பெனி ஒன்றின் விளம்பரத்துக்கு தற்பொழுது இவர் தன்னை மாடலாக மாற்றியுள்ளார். அந்த கடிகாரத்தைப் பார்த்தால் நாம் சாதாரணமாக வாங்கக்கூடிய கடிகாரம் போல இருந்தாலும், அவர் கையில் கட்டியிருந்த சோபர்ட் கம்பெனியின் கடிகாரம் 18 லட்சம் மதிப்புடையதாம்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீபிகா அவர்கள், நம்பகத்தன்மை மற்றும் நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்வது தனக்கு மகிழ்ச்சி தருவதாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025