மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்.!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் கடலுக்கு சென்றுள்ள மீன்வர்கள் கரை திரும்ப வேண்டும் என்று ந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வருகின்ற மே 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 5 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறினால், அது தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு, ஏனெனில் மே இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்பதால் புயல் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் கடலுக்கு சென்றுள்ள மீன்வர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை மீன்வர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025