#BREAKING: பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு..!

பரோல் முடிந்து இன்று பேரறிவாளன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிறையில் உள்ள பல கைதிகள் உயிரிழந்து வரும் நிலையில் பல நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் பரோல் மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பரோல் முடிந்து இன்று பேரறிவாளன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025