தொழிற்சாலைகள் பெருக கலைஞர் கருணாநிதி தான் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழிற்சாலைகள் பெருக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் பேசிய அவர், கொரோனா நிவாரண நிதியாக ஹூண்டாய் நிறுவனம் அரசுக்கு ரூ.5 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தொழிற்சாலைகள் பெருக அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் காரணம். 1996-2001, 2006-2011-ம் ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அதே போல தான் தற்போதைய தமிழக அரசும் உருவாக்குவதற்கு திட்டமிட்டுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தான், நான் இந்த நிறுவனத்திற்கு வந்துள்ளேன்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் எதை தொடங்கி வைத்தாலும், அது எந்த அளவுக்கு செழிக்கும், பலருக்கு பயன்படும், காலங்கள் கடந்து நிற்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த ஹூண்டாய் நிறுவனம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025