பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

விஜய் நடித்து வரும் “பீஸ்ட் “திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படதிற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025