தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டிற்கு சென்று படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் 9.6 மில்லியனிற்கும் மேல் பார்வையார்களை கடந்துள்ளது. அடுத்த மாதம் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தல 61 கெட்டப் இது தான் என்று கூறி வருகிறார்கள்.
&
நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம்.!#AjithKumar | #ThalaAjith | #Valimai | #Thala61 pic.twitter.com/4S9AcWKas5
— Dinasuvadu Cinema (@CinebarTamil) July 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025