தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஈபிஎஸ்

பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.
தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் வீடுகள் முன்பதாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடந்த 23-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில், திமுக அரசு பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளது. நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவை அழிக்கலாம், ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்று தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று பல இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுர் வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக சார்பில் தேர்தலின் போது 505 அறிவிப்புகளை வாக்குறுதியாக அறிவித்தனர். அவற்றில் முக்கியமான சில விஷயங்களை கூட திமுக நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் முதல்வரானதும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யாமல் கண்டு துடைப்பிற்காக கமிஷன் ஒன்றை அமைத்துள்ளார். அதேபோல் கல்விக் கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, ஐந்து சவரன் வங்கி நகை கடன் தள்ளுபடி, மாத தோறும் மின் கட்டணம் வசூல் போன்ற வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் இதுவரை அது சம்பந்தமான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டது குறித்து கூறிய அவர், மக்களை திசை திருப்புவதற்காக இந்த சோதனை மேற்கொள்வதாகவும், பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025