மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், சென்னை, தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் மதுசூதனனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். முதல்வருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025