#ENGvIND: இன்றும் மழையால் போட்டி நிறுத்தம்..!

இங்கிலாந்து அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இங்கிலாந்து அணியில் ராபின்சன் 5, ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடி வந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 11.1 ஓவரில் 25 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோரி பர்ன்ஸ் 11, டொமினிக் சிப்லி 9 ரன்களுடன் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டம் பாதியில் மழை குறுக்கிட்டதால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Due to further rain restart delayed until 18:10 local (10.40 PM IST)#ENGvIND
— BCCI (@BCCI) August 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025