மங்காத்தா 2 பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க – ஹர்பஜன் சிங் ட்விட்.!

பிரெண்ட்ஷிப் படத்தின் ட்ரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டதற்கு ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
ஆக்ஷ்ன் கலந்த க்ரைம் திரைப்படமாக உருவாகி இருந்தது. இசையமைப்பாளர் யுவனின் பின்னணி இசை அஜித்தின் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படியாக அமைந்தது. ரசிகர்களுக்கு மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தான் எடுக்கப்படும் என அஜித் ரசிகர்கள் பலர் காத்துள்ளனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் ட்ரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” வெங்கட் ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என பதிவிட்டுள்ளார். அந்த டிவிட் தற்போது வைரலாகி வருகிறது.
வெங்கட் @vp_offl ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க https://t.co/OljLM0HRj8
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025