டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் : அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை…!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை.
தமிழக அரசின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது.
கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. எனவே காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்று அரசு பணியாளர் தேர்வாணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025