BIGG BOSS 5 : இதோ வந்துட்டாங்கல்ல நம்ம பெண் சிங்கம்….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தற்பொழுது ஒவ்வொருவராக களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணியும், இரண்டாவதாக சீரியல் நடிகர் ராஜு, மூன்றாவதாக மாடல் மதுமிதா, நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக் களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐந்தாவதாக திருநங்கை நமீதா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது போட்டியாளராக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025