#Alert:24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி;25 ஆம் தேதி முதல் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில்,வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பின்னர்,இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை,தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதன்காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த மாதத்தில் உருவாகும் 3 வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025